> மட்டக்களப்பு அரச வைத்தியசாலைகளில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள போலியான மருந்துத் தட்டுப்பாடு?

மட்டக்களப்பு அரச வைத்தியசாலைகளில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள போலியான மருந்துத் தட்டுப்பாடு?

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரச வைத்தியசாலைகளில் போலியான மருந்துத் தட்டுப்பாடு ஏற்ப்படுத்தப் பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் மருத்துவ மாபியாக்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ள நிலையில் அரச வைத்திய சாலையில் போலியான மருந்துத் தட்டுப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலைகள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த வைத்தியசாலைகளில் அறவிடப்படுகின்ற கட்டணமும் மிக அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அதிக கட்டணங்கள் அறவிடப் பட்டாலும் பணம் படைத்தவர்கள் எவ்வளவு பணத்தினைக் கொடுக்கவும் தயாராக உள்ளனர்

மறு புறத்தில்  பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் அரச வைத்தியசாலையையே நாடிச் செல்வர். ஆனால் இன்று அரச வைத்தியசாலைகளுக்கு சென்றும் சிகிச்சையினைப் பெற முடியாத நிலைக்கு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களிடம் மருந்தினை எழுதிக் கொடுத்து குறித்த மருந்து வைத்தியசாலையில் இல்லை எனவும் குறித்த வைத்தியர்களால் பெயர் குறிப்பிடப்படுகின்ற பாமசிகளில் வாங்கும்படியும் சொல்லப்படுவதாக நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த ஒரு வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான மருந்துகளை வழங்கிவிட்டு அதற்கு பதிலாக தங்களுக்கு வேறு மருந்துகளை வாங்கி தரும்படியும் பணிக்கப்படுகின்றனர்.

குறித்த பாமசிகளுக்கும் வைத்தியர்களுக்குமிடையில் பண ரீதியான ஒப்பந்தங்கள் இருக்கின்றனவா எனும் சந்தேகமும் நோயாளர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

மறு புறத்தில் அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை எனும் தோற்றப்பாட்டினை ஏற்ப்படுத்தி தனியார் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அழைப்பதற்கான யுத்தியாகக்கூட மட்டக்களப்பு வைத்திய மாபியாக்களின் செயற்பாடாக இருக்குமா எனும் சந்தேகமும் வலுப்பெறுகின்றது