> சாணக்கியனின் சுய நல அரசியலால் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்

சாணக்கியனின் சுய நல அரசியலால் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள்

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் அர்ப்பாட்டம் எனும் பெயரில் பாராளுமன்ற உறுபினர் சாணக்கிய ராகுல ராஜபத்திரனால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது திட்டமிடப்பட்டு சாரதியும் நடத்துனரும் தாக்கப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் நடாத்தியவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 30 க்கு மேற்ப்பட்டவர்கள் பொலிசாரினால் தேடப்பட்டும் வருகின்றனர்.

இத் தாக்குதல் நடாத்தியவர்கள் சாணக்கிய ராகுல இராஜபுத்திரனின் உசுப்பேற்றல்களால் தூண்டப்பட்டு வண்முறையில் ஈடுபட்டவர்களே. இவர்கள் கலவரத்தை ஏற்ப்படுத்தினார்கள் என்பதற்காக சிறை வைக்கப்பட்டால் இவர்களின் நிலை என்ன? இவர்களின் குடும்பங்களின் நிலை என்ன? இத் தாக்குதலை தூண்டியவர்கள் சாணக்கியனுடன் சென்றிருந்த சாணக்கியனின் மிக நெருங்கியவர்களே. அதில் மட்டு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களும் உண்டு.

சாணக்கிய ராகுல ராஜபுத்திரனும் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு கொழும்பில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உசுப்பேற்றல்களுக்கு அடிமையான இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கின்றனர். 

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் அதிக தமிழ் பற்றும் இன உணர்வும் மிக்கவர்கள். உணர்ச்சிமிக்க பேச்சுக்களுக்கு இலகுவில் அடிமையாகக்கூடியவர்கள். மட்டக்களப்பு இளைஞர்களின் இந்த உணர்வுகளை  தமிழ் தேசியவாதிகள் தமது அரசியலுக்காக  பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் தேசியவாதிகள் கிழக்கு மாகாண இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடி வருகின்றனரே தவிர இவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி உசுப்பேற்றல்களுக்கு ஆளாகி பொங்கி எழுந்த இளைஞர்களோ தமிழ் சமூகமோ இழந்தவை ஏராளம். ஆனால் தமிழ் தேசியவாதிகளோ காலாகாலமாக எமது இளைஞர்களை உசுப்பேற்றி வங்குறோத்து அரசியல் செய்துவருகின்றனர்.

அந்த வரிசையில் இப்போது சாணக்கிய ராகுல ராஜபுத்திரனும் மட்டக்களப்பு இளைஞர்களை உசுப்பேற்றி வங்குறோத்து அரசியல் செய்து அரசியல் இலாபம் தேட முற்ப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக மஹிந்த ராஜபக்சவால் அரசியலுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட சாணக்கிய ராகுல ராஜபுத்திரன் பாராளுமன்ற உறுப்பினராகி வாக்களித்த மக்களுக்கு செய்த சேவைகள் எதுவுமல்ல.

மாறாக ஆர்ப்பாட்டம் கடையடைப்பு என்று இளைஞர்களை உசுப்பேற்றி மட்டக்களப்பு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் வேலைகளையே செய்துவருகின்றார். 

மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டங்களை குழப்புவது, மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகளை இல்லாமல் செய்ய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது என மட்டக்களப்புக்கு பாதிப்பை ஏற்ப்படுத்துகின்ற பாரிய இழப்புக்களைக் கொண்டுவருகின்ற வேலைகளைச் செய்துவருகின்றார். 

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புக்களை செய்து மட்டக்களப்பில் பிரச்சினைகளை தோற்றுவித்து இளைஞர்களை சிறைகளுக்கு அனுப்பும் வேலைகளை திரைமறைவில் திட்டமிட்டு செய்துவருவதுடன் மறுபுறத்தில் மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தித்திட்டங்களை குழப்பி வருகின்றார். 

இவரின் இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை ஏற்ப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு இளைஞர்களை தூண்டிவிட்டு சிறைக்கு அனுப்புவதும், அபிவிருத்தித் திட்டங்களை இல்லாமல் செய்வதும் மஹிந்த அணியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றாரா எனும் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இளைஞர்களே சிந்தியுங்கள் இவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள். சாணக்கிய ராகுல ராஜபுத்திரனை நம்பி வீதிக்கு இறங்கியவர்களின் வாழ்க்கை வீதிக்கு வந்துள்ளது.  சிறைவாசம் அனுபவிக்கும் இளைஞர்களின் நிலையையும் அவர்களின் குடும்பத்தின் நிலையையும் பாருங்கள். இந்த நிலை உங்களுக்கும் வேண்டுமா?

இவர்களின் சுயலாப அரசியலுக்கான பசப்பு வார்த்தைகளையும், உணர்ச்சி பேச்சுக்களையும் நம்பி இனிமேலும் ஏமாந்துவிடாதீர்கள்