> வெளிநாடுகளுக்கு சென்ற யுவதிகள் இலங்கை திரும்ப உடலை விற்கும் பரிதாபம்

வெளிநாடுகளுக்கு சென்ற யுவதிகள் இலங்கை திரும்ப உடலை விற்கும் பரிதாபம்

 வெளிநாடுகளுக்குச் சென்ற யுவதிகள் நாடு திரும்புவதற்கு தமது உடலை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக “அக்கரையில் நாம்” அமைப்பின் தலைவர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.



திருடுவதற்கும் வீணாக்குவதற்கும் அரசாங்கத்திடம் ஏராளமான பணம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக பல மாதங்களாக அவர்களைப் பாதுகாப்பான வீட்டில் வைத்திருப்பதாக கூறுகின்றார்கள். எனினும் அது ஒருபுறம் நாட்டுக்கு சுமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகவர் நிலைய உரிமையாளர்கள் பணிப்பெண்களிடம் அதிக பணம் வசூலிப்பதாகவும், ஆனால் அவர்கள் பணிப்பெண்களுக்கு மிகக் குறைந்த பணமே வழங்குவதாகவும் சுனில் ஹதுன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், உழைப்புக்கு ஏற்ற சம்பளம் கிடைக்காத காரணத்தாலும், பணிப்பெண்கள் வேலை சுமை தாங்க முடியாமல், உரிய ஒப்பந்தங்களை மீறி, அந்த வீடுகளை விட்டு ஓடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பணிப்பெண்களின் கடவுச்சீட்டை மீளப் பெறுவதற்கு முகவர் நிலையங்களுக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்க வேண்டும. பணிப்பெண்களிடம் அதிக பணம் வசூலிக்கும் முகவர் நிலையங்களால் நாட்டுக்கு செல்லும் பெண்கள் அனாதரவாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.