எதிர்வரும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் பல தடவைகள் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கோரிய போதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.