> மதுபான விலை குறைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

மதுபான விலை குறைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

 தற்போதைய நிலையில் மதுபானங்களுக்கான விலை குறைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை என பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியலம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (24.05.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் மதுபானங்களின் விலை அதிகரிப்பின் காரணமாக பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அரசாங்கத்தின் வருமானமும் சற்று குறைந்துள்ளது.

எனினும் அதற்காக மதுபானத்தின் விலை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது. மதுபானப் பாவனை கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது குறையும் அளவுக்கு நல்லது.


கடந்த நாட்களில் அரசாங்கம் மதுபானங்களின் விலையை குறைக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவிக் கொண்டிருக்கின்றது. ஆயினும் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஏனைய பொருட்களின் விலை அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், மதுபானங்களின் விலையை மட்டும் குறைப்பது அநீதியானதாகும். நிதி ஒழுக்கக் கோவைகளுக்கு முரணானதுமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.