> தமிழினப் படுகொலை நினைவேந்தல் தொடர்பில் மகிந்தவின் கருத்து

தமிழினப் படுகொலை நினைவேந்தல் தொடர்பில் மகிந்தவின் கருத்து

 "போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியாக நினைவேந்துங்கள்.



போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை, ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளையும் நினைவேந்துவதால்தான் பிரச்சனைகள் உருவாகிறது."

இவ்வாறு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை.

நினைவேந்தல் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல் நிலை ஏற்படுகின்றது, தடைகளும் வருகின்றன.

போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்பதையே தமிழ் மக்களிடம் நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்

அதைவிடுத்து புலிப்பயங்கரவாதிகளை நினைவேந்தும் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்களும் பங்கேற்று உங்கள் உறவுகளை நினைவேந்துவதைத் தவறவிடாதீர்கள்." என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.