மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.முஸம்மிலின் ஆலோசனைக்கு இணங்க பராமரிப்பு வேலைகள் மற்றும் நேர முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வும் (16) இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேசத்தின் மாவடிச்சேனை 208ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற இச்செயலமர்வில் பராமரிப்புப் பணிகளை இலகுவாகவும், நேரமுகாமைத்துவத்துடனும் எவ்வாறு மேற்கொள்ளல், போதைப்பொருள் பாவனையினால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் மற்றும் இதிலிருந்து இளையவர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டல்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது.