> 59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்: யார் அந்த மணப்பெண்?

59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்: யார் அந்த மணப்பெண்?

 அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நீண்ட நாள் காதலியான, லாரன் சான்செஸை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர்களில் ஒருவராவார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல், லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார்.

ஏற்கனவே மெக்கன்சி ஸ்காட் என்ற பெண்ணோடு வாழ்ந்து வந்த பெசோஸ், கடந்த 2019ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துள்ளார். இந்த தம்பதியினர் 25 ஆண்டுகளாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் விவாகரத்து செய்யும் வரை லாரென் உடனான காதலை வெளிப்படுத்தாமல் இருந்த பெசோஸ்,  கேன்ஸ் விருது வழங்கும் விழாவில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.