> 16 நாட்களுக்கு மூடப்படும் மதுபான சாலைகள்! கலால் திணைக்களம் அறிவிப்பு

16 நாட்களுக்கு மூடப்படும் மதுபான சாலைகள்! கலால் திணைக்களம் அறிவிப்பு

 கதிர்காமம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.



வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலய எசல திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 19 ஆம் திகதி முதல் ஜூலை 4 ஆம் திகதி வரை மதுபானசாலைகளை மூடுவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கதிர்காமம் ஆலயத்தின் எசல திருவிழாவில் பங்குபற்ற வரும் பக்தர்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை விகாரைக்குள் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், எசல திருவிழாவில் பங்குகொள்ள எதிர்பார்க்கும் மக்கள் அனைவரும் அதனைப் பராமரிக்க உதவுமாறு கலால் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கதிர்காமம் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக கலால் தலைமையகத்தில் உள்ள கலால் நடவடிக்கை மையத்திலுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.