அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட ஒரு கணவர், மனைவிக்குத் தெரியாமல் சமையலறையில் இரகசிய கமெராக்களைப் பொருத்தினார்.
கணவருக்கு ஏற்பட்ட சந்தேகம்
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வாழும் Dr. Jack Chen (53)க்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படத்துவங்கியுள்ளது.
உள்ளுறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படவே, தனக்கு யாரோ விஷம் வைத்திருக்கலாம் என Dr. Chenக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை அது தன் மனைவியாக இருக்குமோ என்று சந்தேகித்த Dr. Chen, மனைவிக்குத் தெரியாமல் இரகசியமாக சமையலறையில் கமெராக்களைப் பொருத்தியுள்ளார்.
கமெராவில் கண்ட அதிரவைக்கும் காட்சி
பின்னர் கமெராவில் பதிவான காட்சிகளைப் போட்டுப் பார்த்த Dr. Chen, அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் சந்தேகப்பட்டதுபோலவே, அவரது மனைவியாகிய Yue 'Emily' Yu (45), தன் கணவர் அருந்தும் தேநீரில் விஷம் கலக்கும் காட்சிகள் அந்த கமெராவில் பதிவாகியிருந்தன.
உடனடியாக அவர் பொலிசாருக்கு தகவலளிக்க, Yue கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான Yue, தங்கள் வீட்டில் நிறைய எறும்புகள் இருப்பதாகவும், அந்த எறும்புகளைக் கொல்வதற்காகவே தான் தேநீரில் விஷம் கலந்ததாகவும் தெரிவித்தார்.எறும்புகளைக் கொல்வதற்காகத்தான் விஷம் வைக்கப்பட்டதேயொழிய, Dr. Chenஐக் கொல்வதற்காக அல்ல என்றும் Yue தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மூன்று வெவ்வேறு தருணங்களில் தான் அருந்தும் தேநீரில் Yue விஷம் கலந்ததற்காக வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக Dr. Chen தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடர்கிறது. Dr. Chenஉடைய மனைவியாகிய Yueவும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.