> வான்வழித் தாக்குதலில் கொத்து கொத்தாக இறந்த பெண்கள், குழந்தைகள்..மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

வான்வழித் தாக்குதலில் கொத்து கொத்தாக இறந்த பெண்கள், குழந்தைகள்..மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

 மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராணுவ தாக்குதல்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.



இந்த நிலையில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 20 குழந்தைகள் அடங்குவர்.

மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்கிந்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகியின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பின் அந்நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.