(நவா) உலகை உலுக்கிய 2019 ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்டன.
இந்த நான்கு வருட காலத்துக்குள் இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனையால் இடம்பெற்ற குறித்த தாக்குதலை அரசியல் ஆட்சி மாற்றத்துக்கான தாக்குதல் என நிறுவுவதில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் ஓரளவு வெற்றியடைந்துவிட்டனர் என்றுதான் சொல்லமுடியும்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதன்மூலமான ஆட்சிமாற்றம், மண்டைக்குழப்பமுள்ள எதிர்க்கட்சிகள் என்பவற்றால் அவர்களின் மடைமாற்றல் தந்திரோபாய பிரச்சாரங்கள் ஓரளவு வெற்றிபெற்றுவருகின்றன.
அதற்காக அவர்கள் தேவையானளவு நிதியைப் பயன்படுத்தி தேவையான பலரையும், ஊடகங்கள் பலவற்றையும் விலைக்கு வாங்கி வைத்துள்ளனர்.
அதன் மூலமான பிரச்சாரங்களை சகல தரப்பினரும் நம்பும்படியாக முன்னெடுக்கின்றனர்.
அதன் வெளிப்பாடுதான் இன்று மனோகணேசன் போன்ற அடிப்படைவாதம் பற்றிய தெளிவுள்ளவர்களைக் கூட பக்கவாத்தியம் பாட வைத்திருக்கிறது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வெறுமனே சஹரான் என்ற தீவிரவாதியால் திட்டமிடப்பட்டதல்ல.
அது பலவருட திட்டங்களின் அடிப்படையில் பெரும்புள்ளிகள் பலரின் பின்னணியில் கனகச்சிதமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு மாபெரும் திட்டம்.
அதற்காக பலவருடங்களுக்கு முன்பாக இருந்தே கிழக்கு மாகாணத்தில் காணிகள் கையகப்படுத்தப்பட்டு அதற்கான கட்டுமானத் திட்டங்களும் மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளோடு ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்தன.
திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கமும் கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய தேசமாக மாற்றி் தங்கள் ஆளுகையை உறுதிப்படுத்துவது என்பதாகவே இருந்தது.
குறித்த திட்டத்தில் பல அணிகள் இருந்தன.
அவர்களின் நோக்கத்தில் சறுக்கல் ஏற்பட்டதும் அதன் நேரடிச் செயற்பாட்டு அணியான தாக்குதல் அணியை மட்டும் வெளிப்படுத்திவிட்டு ஏனைய அணிகள் பதுங்கிவிட்டன.
அதுவும் அவர்களின் திட்டத்தில் இருந்தது.
கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய தேசமாக்குவதாக இருந்தால் இலங்கையில் பரந்துவாழும் முஸ்லிம் மக்கள் அனைவரையும் கிழக்கு மாகாணத்துக்கு ஒருமித்து வரவழைக்க வேண்டும்.
கிழக்கிலுள்ள ஏனைய இனமக்களை கூடியளவுக்கு கிழக்கு மாகாணத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும்.
சாதாரணமாக வரவழைப்பதோ, வெளியேற்றுவதோ இயலாத காரியம்.
அதற்காக அவர்கள் போட்ட திட்டம்தான் ஒரு பாரிய கலவரம்.
கலவரம் ஏற்பட்டதும் குறித்த திட்டத்தில் மற்றொரு அணியான அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் போர்வையிலிருந்தவர்கள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு கிழக்கு மாகாணத்துக்கு கொண்டுவந்து,அவர்களுக்கு தற்காலிக இருப்பிடங்களையும், உணவையும் வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தயார்நிலையில் இருந்தனர்.
முதலில் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தர் சிலைகளை உடைக்க ஆரம்பித்தனர்.
ஆனாலும் சிங்கள மக்கள் உடனடியாக கலவரங்களை ஆரம்பிக்காத நிலையில் அவர்களின் அடுத்த செயற்பாடான குண்டுத்தாக்குதல் ஏற்பாடுகளை ஆரம்பித்தனர்.
குறித்த குண்டுத்தாக்குதல்கள் மூலமாக மூன்று இலக்குகளை அடையத் தீர்மானித்தனர்.
அதன் முதலாவது இலக்காக கலவரங்களை ஏற்படுத்துதல், இரண்டாவது இலக்காக சர்வதேச ஐஎஸ் பயங்கரவாதிகளோடு இணைந்து செயற்படும் வகையில் அவர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடியதாக தாக்குதல்களை நடத்துதல், மூன்றாவதாக கிழக்கில் கரையோரரமாக அவர்களின் இஸ்லாமிய தேசத்துக்குத் தடையாகச் செறிந்துவாழும் தமிழ் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துதல் என்பனவாக காணப்பட்டன.
இவற்றை ஒரே நேரத்தில் முன்னெடுக்கும் நோக்கில்தான் கிழக்கில் சில கோயில்கள் மற்றும் தேவாலயங்களும், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பன்சாலைகள் மற்றும் தேவாலயங்கள் என்பன தாக்குதல் இலக்குகளாகத் தெரிவு செய்யப்பட்டன.
அதே நேரத்தில் சர்வதேசத் தீவிரவாநிகளின் நன்மதிப்பைப் பெறும் நோக்கில் வெளிநாட்டவர்கள் தங்கும் விடுதிகளும் இலக்குவைக்கப்பட்டன.
தாக்குதலுக்கான திட்டங்கள் தயாரான நிலையில்தான் குறித்த தாக்குதல் அணிக்குள் பிரச்சனை உருவானது.
தாக்குதல் அணி இரண்டு பிரிவுகளானதும்
கோயில் உற்சவ காலம் மற்றும் வெசாக் பண்டிகைக் காலத்தை இலக்கு வைக்க முயற்சித்த திட்டம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலை நடத்தும்படியாக மாறியது.
தொடரும்..