> ஈஸ்டர் தாக்குதல் அவசர அவசரமாக திட்டமிடப்பட்டனால் தப்பிக்கொண்ட கோவில்கள் - அதிரடி ரிப்போட் பகுதி 2

ஈஸ்டர் தாக்குதல் அவசர அவசரமாக திட்டமிடப்பட்டனால் தப்பிக்கொண்ட கோவில்கள் - அதிரடி ரிப்போட் பகுதி 2

(நவா) 

பகுதி ஒன்றை பார்வையிட 

ஈஸ்டர் தாக்குதலுக்கான திட்டமும் தவறிய இலக்குகளும் - அதிரடி ரிப்போட் - பகுதி 1

பகுதி 1 இல்  2019 ஏப்ரல் 21 க்கு திட்டம் மாற்றப்பட்டமை தொடர்பாகப் பார்த்தோம்.


சஹ்ரான் தலைமையிலான தாக்குதல் அணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அந்த அணி பிளவுபட்டது.அதன்காரணமாக திட்டம் கசியக்கூடும் என்பதால் தாக்குதலை விரைவுபடுத்த சஹ்ரான் தீர்மானித்தான்.(பிளவடைந்த அணியிலிருந்த பலர் கைதாகி இப்போது பிணையில் வெளியாகிவிட்டனர். வழக்கு நடவடிக்கைகள் தொடர்வதால் அதில் முக்கியமான நபர்களின் பெயர்களை இங்கே குறிப்பிடவில்லை.)


வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகளிலும், கோயில் உற்சவங்களிலும் நடத்தப்படவிருந்த தாக்குதல் திட்டம் மாற்றமடைந்தது.

அதற்குப் பதிலாக வேறு இலக்குகள் அவசர அவசரமாக தேடப்பட்டபோது அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புத்தான் உயிர்த்தஞாயிறு தினம்.

சர்வதேச ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் சஹ்ரான் நேரடித் தொடர்பில் இருக்கவில்லை.

அந்தத் தொடர்புகளைப் பேணியவன் வேறொருவன்.
(அவன் இப்போதும் உயிருடன் உள்ளான்)
அவன் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தவுள்ள செய்தியை ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு அறிவித்தபோது அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதனை நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதல் என வெளிக்காட்ட ஐஎஸ் அமைப்பு தீர்மானித்தது.

தாக்குதல் திட்டத்தில் மட்டக்களப்பில் மூன்று இடங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தேற்றாத்தீவு தேவாலயம் மற்றும் தாண்டவன்வெளி தேவாலயம் என்பன அந்த இலக்குகளில் இருந்த போதிலும் தாக்குதலுக்கான தாக்குதல்தாரிகளை இறுதி நேரத்தில் நகர்ததுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவை தப்பித்தன.

சீயோன் தேவாலயம் கூட அவர்களின் இலக்காக இருக்கவில்லை. சீயோன் தேவாயம் அமைந்துள்ள அதே மத்திய வீதியிலுள்ள அன்னைமரியாள் தேவாலயம்தான் தாக்குதல் இலக்காக இருந்துள்ளது. தாக்குதல்தாரி அவ்விடத்துக்கு வந்த நேரத்தில் அங்கு ஆராதனைகள் முடிவுற்றமையால்
தாக்குதல்தாரியே இறுதிநேரத்தில் சீயோன் தேவாலயத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனச்சொல்லப்படுகிறது.

மேலதிக விடயங்களைப் பார்க்க முன்னதாக இந்த மாபெரும் திட்டத்தில் செயற்பட்ட பல அணிகள் பற்றிச் சொல்லியிருந்தேனல்லவா?

அந்த அனைத்து அணிகளிலும் தாக்குதல் அணி தவிர்ந்த ஏனைய அணிகள் அனைத்தும் குறித்த தாக்குதலின் பின்னர் சற்று மௌனமாகி அல்லது தாக்குதல்தாரிகளையும், இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்களையும் கடுமையாக விமர்சித்துவிட்டு மறுபடியும் தங்கள் செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன.

அந்த அணிகளின் செயற்பாட்டாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.
பலம்பொருந்திய அரசியல்வாதிகள், மிகப்பெரும் தொழிலதிபர்கள்,முக்கிய அரச நிறுவனங்களில் தொழில்புரியும் உயரதிகாரிகள்-ஊழியர்கள்,சட்டவாளர்கள்,இணைய விற்பன்னர்கள் எனப் பல்துறை சார்ந்தவர்களும் குறித்த திட்டத்தின் பங்காளர்களாக உள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள்,ஆட்சிமாற்றம் என அனைத்திலும் அவர்களின் மறைகரங்கள் தாக்கம் செலுத்திக்கொண்டேயிருக்கின்றன.
அவர்களின் செயற்பாடுகள் மூலமாக பல சிங்களத் தலைவர்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகள்வரை அவர்களின் திட்டத்துக்குள் தம்மை அறியாமலேயே உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதன்மூலமாக இப்போது குறித்த தாக்குதலை “கோத்தாவின் தாக்குதல்” என்ற மாயையைப் பலமாகப் பதியவைத்துவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு வக்காலத்து வாங்க அல்லது அவருக்கு வெள்ளையடிக்க நான் முயற்சிக்கவில்லை. ஆனாலும் அவர் இராணுவ பின்னணியைக் கொண்டவர் என்ற ஒரே காரணத்துக்காக அவர் ஜனாதிபதியாக வருவதற்கு நடத்தப்பட்ட தாக்குதலாக குறித்த தாக்குதலை மடைமாற்றுவதிலுள்ள பொய்மையை வெளிக்காட்டுவது முக்கியமானது.

குறித்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே நல்லாடசி அரசின் நாதாரித்தனம் சந்தி சிரிக்க ஆரம்பித்திருந்தது.

2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலிலேயே பொதுஜன பெரமுன என்ற கோட்டா கட்சி பாரிய வெற்றியை நிலைநாட்டிய நிலையில் அக்கட்சியின் ஜனாதிபதி வேடபாளராகப் போட்டியிட்டவர் ஒரு தீவிரவாத தாக்குதல் மூலமாகத்தான் ஆட்சியைப் பிடித்தார் எனச் சொல்வதானது மிகமோசமான அறிவிலித்தனம் என்பதோடு அது திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் என்பதும் யதார்த்தமானது.
தொடரும்..